தலைப்புச் செய்திகள்

67 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி: அரசுக்கு 4.3 பில்லியன் ரூபாய் வருமானம்

நாட்டுக்குள் 67 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்காக அதற்காக 4.3 பில்லியன் ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசு அனுமதித்த அரிசி இறக்குமதிக்கான காலக்கெடு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், அந்தக் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் தனியார் இறக்குமதியாளர்கள் 67,000 மெட்ரிக் தொன்களை கொண்டு வந்தனர்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கிலோ ஒன்றுக்கு 65 ரூபாய் வரி விதிக்கப்பட்டது.