தலைப்புச் செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் 75 ஆயிரம் கிலோகிராம் தரக்குறைவானவை: மீள ஏற்றுமதி செய்யுமாறு அறிவுறுத்தல்

இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவான அரிசியில் தரப்பி பிரச்சினைகள் உள்ளமையை இலங்கை சுங்கத் திணைக்களம் கண்டறிந்துள்ளது.

அந்தவகையில் இறக்குமதி செய்யப்பட்ட 50,000 கிலோகிராம் அரிசி அந்துப்பூச்சி தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மேலும் 25,000 கிலோகிராம் அரிசி, தயாரிப்புத் தகவல் லேபிள்களில் உள்ள முரண்பாடுகளுடன், இறக்குமதி விதிமுறைகளை மீறும் வகையில் அடையாளம் காணப்பட்டது.

இதனையடுத்து, சுங்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து, அந்தந்த இறக்குமதியாளர்களுக்கு, குறைபாடுள்ள அரிசித் தொகுதிகளை மீண்டும் ஏற்றுமதி செய்யுமாறுஅறிவுறுத்தியுள்ளனர்.

இணங்கத் தவறினால், குறித்த அரிசித் தொகை சுங்கத்தால் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.