
காட்டுப்பன்றிகள், மயில்கள் மற்றும் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் குறிப்பிடத்தக்க சேதத்தை நிவர்த்தி செய்ய விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு – பொதுமக்களின் ஆதரவைக் கோரியுள்ளது.
உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் தேசியப் பொருளாதாரத்தில் ஆண்டுதோறும் 30 பில்லியன் ரூபாய் பாதிப்பை இவை ஏற்படுத்துகின்றதாக, அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
விலங்கு மற்றும் பறவைகளிடமிருந்து பாதுகாப்பை பெறுவதற்காக பாதுகாப்பு வேலிகள், காற்று துப்பாக்கிகள் மற்றும் கருத்தடை திட்டம் போன்ற நடவடிக்கைகள் இருக்கின்ற போதிலும், சிக்கல் நீடிப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
குரங்குகளின் எண்ணிக்கை சரிபார்க்கப்படாத நிலையில், அவற்றினால் சுற்றுச்சூழல் சமநிலையை மேலும் சீர்குலைத்துள்ளது என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் மேற்படி விலங்குகள் மற்றும் பறவைகள் எற்படுத்தும் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய – குறுகியகால திட்ட முன்மொழிகளை இம்மாதம் 28ஆம் திகதிக்குள் addlsecdev@agrimin.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 0770440590 என்ற வாட்ஸப் எண்ணுக்கு அனுப்புமாறு பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.



