தலைப்புச் செய்திகள்

சுகாதாரம், ஊடகத்துறை அமைச்சு செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க – இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து டொக்டர் அனில் ஜாசிங்கவிடம் கையளித்தார்.