
யாழ்ப்பாண மவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக யாழ்ப்பாணம் வைத்தியசாலை அதிகாரிகள், இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அனுமதியின்றி வைத்தியசாலைக்குள் நுழைந்து அதன் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஏற்கனவே, மன்னார் வைத்தியசாலையின் பணிப்பாளரும் – மன்னார் பொலிஸில், அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் – மருத்துவராக கடமையாற்றிய காலகட்டத்தில், மன்னார் வைத்தியசாலையில் பிரவேசித்து அதன் செயற்பாடுகளை சீர்குலைத்தார் என, அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



