
மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளத்துறை அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம்.ஏ.எல்.எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க – உத்தியோகபூர்வமாக இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க – இன்று (09) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சட்டத்தரணி எம்.ஏ.எல்.எஸ். மந்திரநாயக்கவுக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.
மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளத்துறை அமைச்சராக, ராமலிங்கம் சந்திரசேகர் பதவி வகிக்கின்றார்.



