
சதொச விற்பனை நிலையங்கள் மூலமாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (9) தொடக்கம் 02 ஆக அதிகரிக்கப்படும் என்று, வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் இருந்து பெறப்படும் தேங்காய்கள் 130 ரூபாய்க்கு – குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களை இலக்கு வைத்து சதொச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும்.
தற்போது சதொச நிறுவனம் நாளாந்தம் சுமார் ஒரு லட்சம் தேங்காய்களை விற்பனை செய்கிறது.
அண்மைக்காலமாக பெய்த கடும் மழையினால் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்புகள் – தற்போது தணிந்துள்ளதாக கூறிய வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.



