
“முஸ்லிம் சமூகத்துக்கான அரசியல் தலைவராக பொதுத் தேர்தலின் பின்னர் நான் இருப்பேன்” என, பொதுமேடைகளில் பேசிவந்த – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். முஷாரப் தோல்லியடைந்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக – கடந்த முறை அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்குத் தெரிவான முஷாரப், அந்தக் கட்சிக்குத் துரோகமிழைத்து விட்டு, கட்சியின் முடிவுகளுக்கு மாறாக ஆளுந்தரப்புக்களுக்கு ஆதரவு வழங்கி வந்தார்.
இந்த நிலையில், இம்முறை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் சிலின்டர் சின்னத்தில் – அம்பாறை மாவட்டத்தில் முஷாரப் போட்டியிட்டார்.
ஆனாலும், அம்பாறை மாவட்டத்தில் சிலின்டர் சின்னம் – ஆசனங்களைப் பெறவில்லை. அந்த வகையில், சிலின்டர் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட எஸ்.எம். முஷாரப் நாடாளுமன்றுக்குத் தெரிவாகாமல் தோல்லியடைந்துள்ளார்.
இவர் மட்டுமன்றி சிலின்டர் சின்னத்தில் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் – தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவும் தோல்வியடைந்துள்ளார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஓர் ஆசனத்தை வென்றுள்ளது. அதற்கு நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. தாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



