மட்டக்களப்பில் சாணக்கியன், ஹிஸ்புல்லா உள்ளிட்டோர் வெற்றி
மட்டக்களப்பு மாவட்டத்தை அகில இலங்கை தமிழரசுக் கட்சி வென்றுள்ளது. அதன்படி அந்தக் கட்சிக்கு மட்டக்களப்பில் 03 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
தமிழரசுக் கட்சியில் ஆர். சாணக்கியன், ஜி. சிறிநேசன் மற்றும் சிறிநாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 01 ஆசனம் கிடைத்துள்ளது. அதற்காக கே. பிரபு தெரிவாகியுள்ளார்.
அங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது. அதனை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வென்றுள்ளார்.