
– றிசாத் ஏ காதர் –
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் ‘அக்ரோடெக்’ பிரிவின் வணிக அளவிலான மூலிகை மருத்துவ தாவர மையத்தை விஸ்தரிக்கும் நிகழ்வு இன்று (07) தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தல் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
தொழிநுட்ப பீடத்தின் ‘அக்ரோடக்’ பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.என்.எம். முபாறாக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் – ‘அக்ரோடெக்’ பூங்காவின் கடந்தகால, தற்போதைய நிலைகள் மற்றும் எதிர்கால விஸ்தரிப்பு தொடர்பாகவும் விரிவான விளக்கத்தினை அவர் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் டொக்டர் எம்.ஏ. நபீல், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சஹீலா இஸ்ஸடீன் ஆகியோருடன் – உயிரியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொறியியலாளர் என.எம். இப்ஹாம், ஆயுர்வேத மருந்து உற்பத்தி பிரிவின் வைத்திய அத்தியட்சகர் யூ.எல். நிஹாயா உட்பட ஆயுர்வேத வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் கலந்து கொண்டனர்.
தொழிநுட்ப பீட ‘அக்ரோடெக்’ பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர்களான டொக்டர் குமார, எச்.ஏ.டப்ளியு.பி. ஹெட்டியாராச்சி உட்பட விரிவுரையாளர்கள, மாணவர்கள் மற்றும் பணியாளர்களும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.
கிழக்கு மாகாணத்தில் சுதேச மருத்துவத்துறையினை ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு பொருத்தமான வகையில் விஸ்தரிக்கும் வேலைத் திட்டத்தினை, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவின் ஆலோசனைக்கு அமைவாகவும் மாகாண சுகாதார அமைச்சின் செயாளார் பொறியியலாளர் என். சிவலிங்கம் வழிகாட்டுதலுக்கு அமைவாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக உதவிச் செயலாளர் கரனின் நேரடி மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் நடைமுறப்படுத்தப்படுகின்றது.
நிகழ்வின் இறுதியில் கலந்துகொண்ட அதிதிகள் – தாவரங்கள், வணிக ரீதியிலான மூலிகைகள் ஆகியவற்றை நட்டனர்.






