
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், 1,000க்கும் குறைவானவர்களே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளமை, அரசியல் ஈடுபாடுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது என்று – பஃப்ரல் அமைப்பின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த போக்குக்கு காரணம் அரசியல் ஈடுபாட்டின் நன்மைகள் மற்றும் பாரம்பரிய கட்சி கட்டமைப்புகள் மீது வளர்ந்து வரும் ஏமாற்றம் பற்றிய மக்கள் பார்வையில் மாற்றம் ஏற்பட்டமையே ஆகும்.
மேலும், கிட்டத்தட்ட 600,000 பிராந்திய கட்சி அலுவலகங்கள் திறப்பதற்கு அனுமதி பெறப்பட்ட போதிலும், 9,291 பிராந்திய கட்சி அலுவலகங்கள் மட்டுமே தற்போது இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசியல் கட்சிகளின் பல பிராந்திய பிரதிநிதிகள் செயலற்ற தன்மையின் அறிகுறிகளை காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



