முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த கைது
முன்னாள் ராஜங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, மிரிஹானவில் உள்ள அவரின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் இருந்து- இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
லொஹான் ரத்வத்த இன்று (31) பிற்பகல் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, குறித்த வாகனம் மிரிஹானவில் உள்ள முன்னாள் அமைச்சரின் மனைவியின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை நடத்திய பொலிஸார், குறித்த இடத்தில வாகனம் இருப்பதைக் கண்டுபிடித்த பின்னரே, அந்த வீடு ரத்வத்தேயின் மனைவிக்கு சொந்தமானது என்று தெரிந்து கொண்டனர்.
அண்மையில் கண்டியில் தற்கொலை செய்து கொண்ட தனது ஒருங்கிணைப்புச் செயலாளர், தனக்குத் தெரிவிக்காமல் குறித்த வாகனத்தை அங்கு கொண்டு வந்ததாகவும், வாகனத்தின் உரிமையாளர் யார் என்பது தனக்குத் தெரியாது என்றும் லொஹான் ரத்வத்த விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.