
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று (30) பிணைணயில் விடுவிக்கப்பட்டார்.
தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான 5 சரீரப் பிணைகளுடன் – அவரை பிணையில் விடுவிப்பதற்கு, கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்போது ஊடகங்களுக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர், நீதிமன்றில் உண்மை வௌியாக வேண்டும் என்றார்.
மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டிடுவதாகவும் தெரிவித்தார்.
சமீபத்தில் பிலபல ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக – ஒக்டோபர் 23ஆம் திகதி, ஜொன்ஸ்டன் கைது செய்யப்பட்டார்.
தொடர்பான செய்தி: முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு விளக்க மறியல்



