
வாரியபொல அருகே விபத்துக்குள்ளான டிஃபெண்டர் வாகனத்தை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவரை – பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்குச் சொந்தமானது என கூறப்படும் டிஃபென்டர் வாகனம், அனுராதபுரம் – பதெனிய வீதியில் நேற்று (26) விபத்துக்குள்ளானது. இதன்போது பேருந்து நிறுத்தமும், வாகனமும் பாரியளவில் சேதமடைந்துள்ளன.
தன்னை வாரியபொல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி என அடையாளப்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அந்த இளைஞனை அச்சுறுத்தும் காட்சியை குறித்த இளைஞர் பதிவு செய்துள்ளார். இது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.



