அறுகம்பே பகுதியில் குண்டுகள் இருப்பதாக கூறிய சாய்ந்தமருது நபர் கைது

🕔 October 27, 2024

றுகம்பே பகுதியில் வெடிகுண்டுகள் இருப்பதாகக் கூறி, அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சிலரை மிரட்டியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை – பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் அறுகம்பே பகுதியிலுள்ள 03 இடங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாகவும், அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் சுற்றுலாப் பயணிகளிடம் கூறியுள்ளார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த சுற்றுலாப் பயணிகள் பொலிஸ் நிலையத்தில் முறைபாடளித்த நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்