தலைப்புச் செய்திகள்

தேநீர் பக்கட்டுக்குள் மறைத்து கடத்த முற்பட்ட 10 கிலோ ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் நபர் கிக்கினார்

மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நேற்று (18) இரவு வந்த இலங்கைப் பயணி ஒருவரை, இலங்கை சுங்க அதிகாரிகள் 10 கிலோகிராம் எடையுள்ள ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்) வைத்திருந்தமைக்காக கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் 250 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH 179 என்ற விமானத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்த பயணியின் பொதியில், தேநீர் பக்கெட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10.197 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபர் சுங்கத்திற்கு அறிவிக்காமல் கிரீன் சேனல் (green channel) வழியாக வெளியேற முயற்சித்துள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய பயணி, போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.