
முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அரசுக்குத் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களைத் திரும்பக் கையளிக்கும் போது, நிலுவையில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை செலுத்துவது கட்டாயமாகும் என, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இதனைப் புறக்கணிக்குமு் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு – பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்களுக்கு 28 உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் மட்டுமே மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ இல்லங்களைத் திரும்பப் பெறும்போது நிலுவையில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களைத் தீர்ப்பது கட்டாயமாகும் எனவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.



