தலைப்புச் செய்திகள்

26 வயது உலக சாம்பியன் மரணம்

இருபது வயதுக்குட்பட்ட 800 மீட்டர் ஓட்டப் பந்தைய முன்னாள் உலக சாம்பியன், கென்யாவைச் சேர்ந்த கிபிகோன் பெட் (Kipyegon Bett), தனது 26 வயதில் காலமானார்.

2016 இல் குறிதத சாம்பியன் பட்டத்தை வென்ற கிபிகோன் பெட், 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

அதன் பின்னர் 2018 இல் ஊக்கமருந்து பாவித்தமைக்காக – நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் தடகள வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டார்.

கிபிகோன் பெட் – ஒரு மாதமாக கடுமையான வயிற்று வலியை அனுபவித்து வந்தார் என, அவரின் சகோதரி தெரிவித்துள்ளார். அவருக்கு கல்லீரல் நோய் ஏற்பட்டமை கண்டறியப்பட்டது. இந்த நிலையில் அவர் ரத்த வாந்தி எடுத்தமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

கிபிகோன் பெட், இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் மனச்சோர்வுக்கு உள்ளானதாகவும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களுக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட தடை ஓகஸ்ட் 2022இல் முடிவடைந்தாலும், அவர் போட்டி விளையாட்டுகளுக்கு திரும்புவது கடினமாக அமைந்தது.