தலைப்புச் செய்திகள்

தனிப்பட்ட தொலைபேசிக் கட்டணத்தை, அரச பணத்தில் செலுத்தியமை: கெஹலியவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்த போது, அவரின் தனிப்பட்ட தொலைபேசி கட்டணமாக 240,000 ரூபாயை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்திச் செலுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக அவருக்கு எதிராகவும், அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராகவும் லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் நொவம்பர் மாதம் 29ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக இன்றையதினம் (03) நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க அறிவித்தார்.

மருந்து இறக்குமதியில் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பல மாதங்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்து, அண்மையில்தான் விடுவிக்கப்பட்டிருந்தார்.