துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு முன்னாள் எம்.பிகளுக்கு அறிவித்தல்

🕔 September 30, 2024

நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது வழங்கப்பட்ட துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவு – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதனை அறிவித்துள்ளது.

இது தொடர்பான கடிதங்களை உடனடியாக முன்னாள் எம்.பி.க்களுக்கு அனுப்பிவைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என – அந்த பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து வசதிகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

இதன்படி, முன்னாள் எம்.பி.க்கள் இனி எம்.பி.க்கான கொடுப்பனவு, பணியாளர் கொடுப்பனவுகள், எரிபொருள் வழங்கல் மற்றும் முத்திரை கட்டணம் ஆகியவற்றைப் பெற முடியாது.

இருந்தபோதிலும், எதிர்வரும் தேர்தல் வரை மாதிவல வீடமைப்புத் தொகுதியில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலில் மீண்டும் தெரிவு செய்யப்படாத முன்னாள் உறுப்பினர்கள் தேர்தல் முடிந்த மறுநாளே வீடுகளை ஒப்படைக்க வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்