அரசாங்கம் வழங்கவிருந்த உரம் மற்றும் எரிபொருளுக்கான மானியங்கள் இடைநிறுத்தம்
விவசாயிகளுக்கு பெரும் போகத்தின் போது உர மானியமாக வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ள 25,000 ரூபாய் கொடுப்பனவையும், அதேபோன்று மீனவர்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்பட்ட – எரிபொருள் மானியத்தினையும் தேர்தல் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் – ஏனைய வேட்பாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற் கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு நேற்றுமுன்தினம் (28) கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொதுத் தேர்தலின் பின்னர் குறித்த மானியங்களை வழங்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.