2023ஆம் ஆண்டு முதல், 172 மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன

🕔 September 29, 2024

2023ஆம் ஆண்டு தொடக்கம் 172 மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, – கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சட்ட விரோதமாக அதிகளவான மதுபான நிலைய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சில தரப்பினரின் கூற்றுக்கள் பொய்யானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அரசாங்கத்தின் கொள்கை முடிவுக்கு இணங்க 172 மதுபான விற்பனை உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெளிவுபடுத்தினார்.

வழங்கப்பட்ட இந்த 172 அனுமதிப்பத்திரங்கள் மூலம் 2.2 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வரி பாக்கிகளை நொவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கலால் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்