க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின: மேலதிக தகவல் பெற விரும்புவோருக்கான தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன

🕔 September 29, 2024

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையத்தளங்களில் பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை காணலாம்.

இந்த பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் தகவல்களை பெற்றுக் கொள்ள விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் கேட்டுக்கொள்கிறது: 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537.

வெளியாகியுள்ள பரீட்சை முவுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1 முதல் ஒக்டோபர் 14 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த ஆண்டு, மொத்தம் 452,979 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். அவர்களில்பாடசாலை பரீட்சார்த்திகள் 387,648 பேர்களாவர். 65,331 பேர் தனிப்பட்ட தனிப்பட்ட பரீட்சார்த்திகளாவர்.

இவ்வருடம் மே 06 முதல் மே 15 வரை 3,527 மையங்களில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை இடம்பெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்