தலைப்புச் செய்திகள்

பிரதமர் தினேஷ் குணவர்த்தன ராஜிநாமா

பிரதமர் தினேஷ் குணவர்த்தன தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற – அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் தினேஷ் குணவர்தன வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“இலங்கை எதிர்கொண்ட கடினமான மற்றும் சவாலான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவும், நாங்கள் செய்த பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதன் மூலம், ஜனாதிபதி என்ற வகையில் உங்களால் மக்களுக்கு நலன்களை வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்றும் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.