அனுரவை சந்தித்து இந்தியத் தூதுவர் வாழ்த்துத் தெரிவிப்பு
🕔 September 22, 2024
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவை இந்தியத் தலைவரின் செய்தியுடன் சந்தித்தார்.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுர குமார திசாநாயக்கவை சந்தித்த தூதுவர், இந்தியத் தலைமையின் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மக்கள் ஆணையை வென்றதற்காக அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தும் உடனிருந்தார்.
நமது இரு நாட்டு மக்களின் செழுமைக்காக உறவுகளை மேலும் ஆழப்படுத்த உறுதி பூண்டுள்ளோம் – என, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.