
ஜனாதிபதி வேட்பாளர்களில் அவர்களின் பிரசாரத்துக்காக அனுரகுமார திஸாநாயக்கவுக்கே நாடளாவிய ரீதியில் அதிக அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனுர குமார திஸாநாயவுக்கு 4980 அலுவலகங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரத்திற்காக திறக்கப்பட்டுள்ள அலுவலகங்களின் எண்ணிக்கையை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தின் புள்ளிவிபரங்களின்படி அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சி அலுவலகங்களைக் கொண்ட வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஆவார்.
இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான அலுவலகங்களைக் கொண்ட வேட்பாளர் சஜித் பிரேமதாச. அவரின் பிரச்சாரத்துக்காக 3872 அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அவருக்கு அடுத்தபடியாக 1013 அலுவலகங்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்றாவது இடத்தில் உள்ளார்.
புள்ளிவிபரங்களின்படி, அதிக எண்ணிக்கையிலான அலுவலகங்கள், மேல் மாகாணத்தில் அமைந்துள்ளன. அதைத் தொடர்ந்து முறையே தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ளன.



