
சாவகச்சேரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 94.52 கிலோகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்நேற்று (15) மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கெப் வண்டியொன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 37 மில்லியன் ரூபாயாகும்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் மற்றும் கெப் வண்டியுடன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



