தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலன்று ஊரங்குச் சட்டம்?: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விளக்கம்

தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க டெய்லி மிரருக்குத் தெரிவிக்கையில்; தேர்தல் காலத்தில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்றும், தேவைப்பட்டால் பொலிஸாருக்கு ஆதரவாக முப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர் எனவும் கூறினார்.

செப்டெம்பர் 21 ஆம் திகதி வாக்களிப்பின் பின்னர் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமா என வினவியபோது, ​​ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு தொடர்பில் -தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

பாரிய அசம்பாவிதங்கள் எதுவுமின்றி இதுவரை நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட தேர்தல் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸார் தொடர்ந்தும் தமது முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.