
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது என்றும், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது எனவும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (12) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயங்களைக் கூறினார்.
ஒரு பௌத்த நாடு அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் சமூகங்களை பாதுகாக்கும். குறுகிய கால நன்மைகள், சலுகைகள் அல்லது பதவிகளுக்காக பொதுஜன பெரமுன நாட்டை அல்லது கட்சியை ஒருபோதும் காட்டிக் கொடுக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.



