
உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்து, புதிதாக வேட்புமனுக்களை கோரும் சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
கடந்த வருடம் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டு, தேர்தலுக்கான தினமும் அறிவிக்கப்பட்டது.
ஆயினும், தேர்தலை நடத்துவதற்கான நிதியில்லை என அரசாங்கம் தெரிவித்தமையினால் அந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அரசாங்கத்தின் இந்த முடிவு, அடிப்படை உரிமையை மீறும் செயல் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.



