
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு சுமார் 1000 முறைப்பாாடுகள் கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 31 முதல் ஓகஸ்ட் 26 வரை மொத்தம் 925 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவற்றில் 901 முறைப்பாடுகள் – தேர்தல் சட்ட மீறல்களாகும். ஒரு முறைப்பாடு வன்முறைச் சம்பவம் தொடர்பானது.
ஒரு மாதத்திற்குள் ஏறக்குறைய 1,000 புகார்களைப் பெறுவது மிகவும் கவலைக்குரிய சூழ்நிலை என்று தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (பஃப்ரல்) அமைப்புக்கு – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுமார் 250 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.



