தலைப்புச் செய்திகள்

ஹெலிகொப்டர்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அரச செலவில் பயன்படுத்தத் தடை

தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளின் போது – அரச செலவில் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசுக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படுமாயின், அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

எனினும் தேர்தல் கடமைகள் அல்லாத வேறு நடவடிக்கைகளுக்காக அரசின் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.