
உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே அது சாத்தியமாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் இணைந்து, நீதிமன்றத் தீர்ப்பை அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக, ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ஏ. ரத்நாயக்க கூறியுள்ளார்.
இருந்தபோதிலும், ஜனாதிபதித் தேர்தலையும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தும் நிலையில் ஆணைக்குழு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை எதிர்வரும் புதன் கிழமை கூடும் கூட்டத்தில் இது தொடர்பில முடிவு எடுப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாமைல் – தேர்தல் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபருடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – நிதியமைச்சர் என்ற வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் புறக்கணிப்புக்கள், அவர்களின் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான நடத்தை காரணமாக, அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.



