தலைப்புச் செய்திகள்

இலங்கைக்கு அனுப்பப்பட்ட 30 கிலோ ஹஷிஸ்: ஒருவர் கைது

இலங்கைக்கு அனுப்பப்பட்ட 30 கிலோ ஹஷிஸ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததுள்ளனர். அதன் மதிப்பு சுமார் 212 மில்லியன் ரூபாயாகும். கொழும்பில் உள்ள clearing நிறுவனம் மூலம் – இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பரிசுப் பொட்டலத்தில் – இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை சுங்கப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஹஷிஸ் போதைப்பொருள் – மத்துகம பிரதேசத்திலுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.