
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் 01 கோடியே 72 லட்சத்து 40 ஆயிரத்து 354 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர் என, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். இங்கு 18 லட்சத்து 81 ஆயிரத்து 129 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
17 லட்சத்து 65 ஆயிரத்து 351 வாக்காளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளார்கள்.
14 லட்சத்து 17 ஆயிரத்து 226 வாக்காளர்கள் – குருநாகல் மாவட்டத்தில் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
11 லட்சத்து 91ஆயிரத்து 399 வாக்காளர்கள் கண்டி மாவட்டத்தில் இம்முறை பதிவு செய்யப்பட்டுள்ளனர்.



