தலைப்புச் செய்திகள்

சரத் பொன்சேகா கட்டுப்பணம் செலுத்தினார்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா இன்றைய தினம் (05) கட்டுப் பணம் செலுத்தியுள்ளார்.

சட்டத்தரணி சமீர கலே ஆராச்சி – இந்தக் கட்டுப் பணத்தை சரத் பொன்சேகா சார்பில் செலுத்தினார்.

சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடும் பொருட்டு அவர் சார்பாக கட்டுப் பணம் செலுத்தப்பட்டது.

2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து அன்னம் சின்னத்தில் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டமை நினைவு கொள்ளத்தக்கது.