தலைப்புச் செய்திகள்

சிஐடியின் குற்றச்சாட்டுக்கு நீதிமன்றில் டயானா கமகே மறுப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையானது இல்லை என, முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தனக்கு எதிரான 07 குற்றச்சாட்டுக்களை இன்று (01) காலை நீதிமன்றத்தில் வாசித்த பின்னர், இதனைக் கூறினார்.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

செல்லுபடியாகும் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் பொய்யான வாக்குமூலங்களை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் – டயானா கமகேவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.