
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ – ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஏற்கனவே 06 பேர் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ள நிலையில், விஜேதாச ராஜபக்ஷவும் இன்று (01) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இவ்வாறு கட்டுப் பணம் செலுத்தியுள்ள 07 பேரிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட இருவர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். ஏனைய ஐவரும் கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர்.



