தலைப்புச் செய்திகள்

ரணிலுக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக்குழு தீர்மானம்

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட குழுவும் ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேன மேலும் கூறியுள்ளார்.

இன்று (30) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டத்தில் – ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது சொந்த வேட்பாளரை களமிறக்கும் தீர்மானத்தை நேற்று வெளியிட்ட நிலையில் – இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.