தலைப்புச் செய்திகள்

22ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது

அரசியலமைப்புக்கான 22வது திருத்தம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரை வர்த்தமானி பிரசுரத்தை நிறுத்துமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ – நீதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்ததாக கூறிய ஒரு நாளிலேயே இவ்வாறு நடந்துள்ளது.

தேர்தலை ஒத்திவைக்கும் தந்திரோபாயமாக இந்த திருத்தம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலேயே, வர்த்தமானி வெளியிடப்பட மாட்டாது என, அமைச்சர் கூறியிருந்தார்.

’06 ஆண்டுகளுக்கு மேல்’ என்ற வார்த்தைகளை ‘ஐந்தாண்டுகளுக்கு மேல்’ என்று மாற்றுவதன் மூலம் 83 வது பிரிவின் (ஆ) பத்தியை மாற்றுவதை அரசியலமைப்புக்கான 22வது திருத்தம் முன்மொழிகின்றது.