எனது மரணத்துக்கு காரணமான அம்மாவை கொன்று விடுங்கள்: கடிதம் எழுதி விட்டு, சிறுவன் தற்கொலை

🕔 February 9, 2016

Suicide - boy - 02
– க. கிஷாந்தன் –

“என்னுடைய மரணத்துக்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும்” என கடிதமெழுதிவிட்டு, சிறுவனொருவன் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

தற்கொலை செய்து கொண்டவர், பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் 14 வயது பாடசாலை மாணவன் ஆவார்.

இச்சம்வம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுவனின் சகோதரியை அவரின் தாயார் பாடசாலைக்கு அழைத்து சென்ற வேளையிலேயே, சிறுவன் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஜேசுதாஸ் மில்ரோய் பெர்னாண்டோ எனும் இந்தச் சிறுவன், பொகவந்தலாவை சென். மேரீஸ் மத்திய கல்லலூரியில் தரம் 09 இல் கல்வி கற்று வந்தவராவார்.

தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் அருகில் இருந்து கடிதம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். அதில் ‘நான் இறந்ததுக்கு காரணம் எனது அம்மா, அவரைக் கொல்லவும்’ என்று, எழுத்துப் பிழைகளுடன் எழுதப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சிறுவன் பொகவந்தலாவை கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற மரணவீட்டுக்கு நேற்றிரவு சென்று வந்ததாகத தெரிவிக்கப்படும் நிலையில், அவரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கபடும் என்று பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.Suicide - boy - 03Suicide - boy - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்