வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு, ஐ.நா. அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

🕔 February 9, 2016

– அஷ்ரப் ஏ சமத் –

ட மாகாணத்திலிருந்து எல்.ரீ.ரீ.ஈ.யினரால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றப் பிரச்சினைக்கு தீா்வைப் பெற்றுத் தருமாறு கோரி, ஜக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

‘வடக்கு முஸ்லிம் அமைப்பு’ இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது, இலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை சந்தித்து தமது பிரச்சினை தொடர்பான அறிக்கையினை வழங்குவதற்கு சா்ந்தா்ப்பம் பெற்றுத் தருமாறும், ஆர்பாட்டக்காரா்கள் கோரிக்கை விடுத்தனர்.

வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளில் அவதானம் செலுத்து மாறும்,  வடக்கிலிருந்து 1990களில் இடம் பெயா்ந்த முஸ்லிம்களின் பிரதான பிரச்சினைகளான மீள் குடியேற்றம், இழப்பீடு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், தமக்கு நிவாரணம் பெற்றுத் தருமாறும் ஆர்ப்பாட்டக்கார்கள் கோசமிட்டனர்.

மேலும், அரசாங்கமும் சர்வதேச சமுகமும் தலையிட்டு தமது காணிகள், சொத்துக்கள் மற்றும் இருப்பிடங்களைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.

வடக்கிலிருந்து இடம்பெயந்து வந்த நிலையில், புத்தளத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களின் அறிக்கையினை – வடக்கு முஸ்லிம் அமைப்பின் தலைவா் அமீன் மற்றும் சுபியான் ஆகியோா்களிடமிருந்து, ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலக அதிகாரி பெற்றுக் கொண்டாா்.  

SAMSUNG CSC

SAMSUNG CSC

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்