உள்ளூராட்சி சபை ஊழியர்கள் 08 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர நியமனம்: ஜுலையில் கடிதம் வழங்கப்படும்

🕔 June 27, 2024

ள்ளூராட்சி சபைகளில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில் பணி புரியும் பணியாளர்களுக்கு – நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து பிரதமரும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் அமைச்சருமான தினேஷ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

இதன் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் பணியாற்றும் 8,435 பேர் நிரந்தர நியமனம் பெறவுள்ளனர்.

நியமனக் கடிதங்களை விரைவாக வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல், பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அண்மையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

அதன்படி, அந்த நியமனக் கடிதங்கள் அனைவருக்கும் ஜூலை மாதத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்