விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பொறியியலாளர் ஆக்கிலை, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

🕔 June 27, 2024

ஞ்சம் பெற்றுக் கொண்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தின் பொறியியலாளர் ஆக்கில் என்பவரையும் அவரின் சாரதியையும், எதிர்வரும் 11ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்கரைப்பற்றிலுள்ள கனரக வாகனங்களின் உரிமையாளர் ஒருவரிடம் இரண்டு லட்சம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொள்ள முயற்சித்த போது, லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் – மேற்படி பொறியியலாளரும் அவரின் சாரதியும் கைது செய்யப்பட்டனர்.

அதனையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 13ஆம் திகதி, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் – லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை 14 நாட்கள் (இன்று 27ஆம் திகதி வரை) விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்தப் பின்னணியில், குறித்த பொறியியலாளரும் அவரின் சாரதியும் இன்றைய தினம் மீண்டும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவர்கள் இருவரையும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தவிட்டுள்ளார்.

தொடர்பான கட்டுரை: லஞ்ச விவகாரத்தில் சிக்கிய அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர்: கதைகளும், கட்டுக் கதைகளும்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்