
பொலிஸாரின் புதிய திட்டத்தின் மூலம் போதைப்பொருள் பாவனையிலிருந்து சுமார் 1500 இளைஞர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
“அடுத்த கட்டமாக, 12,500 போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்க, இலங்கை முழுவதும் 285 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படும். இது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் புனர்வாழ்வுத் திட்டமாகும்” எனவும் அவர் கூறினார்.
போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்டு வரும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர், அடுத்த மாதம் வேலைத்திட்டம் தீவிரப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
“அடுத்த மாதத்தில் யுக்திய நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். எஞ்சியிருக்கும் போதைக்கு அடிமையானவர்கள் சுனாமி போல கையாளப்படுவார்கள்” எனவும் அவர் கூறினார்.
2023 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்ட யுக்திய திட்டத்தின் மூலம், 23 வீதமான குற்றங்களைக் குறைத்ததாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தா்.



