அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஹஜ் யாத்திரீகர் மரணம்: மக்காவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை

🕔 June 19, 2024

ஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற – அக்கரைப்பற்றைச் சேர்ந்த 68 வயதான ஆதம்லெப்பை அப்துல் கபூர் என்பவர் உயிரிழந்துள்ளார் என, இலங்கை முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அக்கரைப்பற்று 06ஆம் குறிச்சி, முஸ்லிம் மத்திய கல்லூரி வீதியைச் சேர்ந்த மேற்படி ஹஜ் யாத்திரீகர் – மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

இவரின் ஜனாஸா – மக்காவிலுள்ள மன்னர் அப்துல் அசீஸ் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்காவிலேயே உடலை நல்லடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய, கலாசார திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்