
நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) சஞ்சீவ மஹாநாமவை கைது செய்ய – நீதிமன்ற உத்தரவை பொலிஸார் நாடவுள்ளனர் என்று – பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உத்திக பிரேமரத்னவிடம் வாக்குமூலத்தையும் பொலிஸார் பதிவு செய்யவுள்ளனர்.
புதிய அணுகுமுறையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தனது துப்பாக்கியை மற்றொரு நபரிடம் விமான நிலையத்தில் கொடுத்துவிட்டு – வெளிநாடு சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
தொடர்பான செய்தி: முன்னாள் எம்.பி உத்திகவின் வீடு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, திட்டமிடப்பட்ட நாடகம்; உதவிய பொலிஸ் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்



