லாஃப்ஸ் நிறுவனம், லிட்ரோவை விடவும் அதிகளவில் எரிவாயு விலையைக் குறைத்தது

🕔 June 4, 2024

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,680 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

05 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுது. அதன் புதிய விலை 1,477 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனமும் எரிவாயுக்கான விலையைக் குறைத்துள்ளது. அந்நிறுவனம் 12.5 கிலோ கிராம் எரிவாயுவுக்கு 150 ரூபாயை குறைத்துள்ளது. அதன்படி புதிய விலை 3970 ரூபயாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்