42 வருடத்தை நேற்று பூர்த்தி செய்த ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்: 300 கோடி ரூபா கடனில் மூழ்கியுள்ளதாக தகவல்

🕔 February 15, 2024

லங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம் நேற்று அதன் 42ஆவது வருடத்தை பூர்த்தி செய்துள்ள நிலையில், நேற்று முன்தினம் – அந்த நிறுவனத்துக்கான மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையினால், இலங்கை மின்சார சபை – ரூபவாஹினிக்கான மின்சாரத்தை துண்டித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆயினும் கட்டணத்தில் ஒரு பகுதி செலுத்தப்பட்டமையினால், மின் விநியோகம் மீளவும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தினால், கடந்த காலங்களில் இலங் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்கான மின்சாரம் சுமார் 10 முறை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களின் கூற்றுப்படி, 3,00 கோடி ரூபா கடனில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மூழ்கியுள்ளது.

மேலும், ரூபவாஹினிக் கூட்டுததபானம் பல ஆண்டுகளாக அரசுக்கு செலுத்த வேண்டிய வற் (VAT) ஐ செலுத்தவில்லை என்றும், பல மாதங்களாக அதன் ஊழியர்களுக்கு ஈபிஎப் (EPF) மற்றும் ஈரிஎப் (ETF) செலுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சுமார் 65 ஊழியர்கள் ரூபவாஹியை விட்டு வெளியேறிய போதிலும், நிறுவனத்தால் அவர்களின் ஓய்வுக் கொடுப்பனவு, ஈபிஎப் (EPF) மற்றும் ஈரிஎப் (ETF) ஆகியவற்றைச் செலுத்த முடியவில்லை என்று அறிக்கைகள் மேலும் கூறுகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்