
வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் – ஜனாதிபதி செயலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (10) ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், வாகன இறக்குமதி செய்ப்படும் திகதியை முன்கூட்டியே தெரிவித்தால், அது நாட்டின் வாகன சந்தையை பாதிக்கும் என்பதால், அந்தத் திகதியை அறிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“நான் திகதியை அறிவித்தால் உள்ளூர் வாகன விற்பனையில் பாரிய மாற்றம் ஏற்படும்” என சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.



